» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருந்துகடை உரிமையாளர் கொலை வழக்கில் கைதான 4பேர் உட்பட 5பேர் மீது குண்டாஸ்!
வியாழன் 13, ஜூன் 2024 9:58:54 PM (IST)
தூத்துக்குடியில் மருந்து கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் உட்பட 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 11.05.2024 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான செந்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்த வழக்கில் கோவில்பட்டி நாலாட்டின்புதூரைச் சேர்ந்த பூமிநாதன் (எ) லெனின் மகன் கோபிநாத் (37), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியநாயகம் மகன் சங்கர் (எ) சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராம்குமார் (25) மற்றும் சிலரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்முறை செய்த வழக்கில் புதுக்கோட்டை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹிம் மகன் பசீர் (48) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த 03.05.2024 அன்று கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான கோபிநாத், சங்கர் (எ) சங்கரலிங்கம், மணிகண்டன், ராம்குமார், பசீர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
