» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 பேர் கைது

வியாழன் 13, ஜூன் 2024 5:51:32 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி கணபதி நகரைச் சேர்ந்த கனகராஜ் மகன் நாராயணன் நவீன் (19) மற்றும் கோவில்பட்டி கூசாலிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுப்புராஜ் (24) ஆகிய 2பேரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 200கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory