» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குவைத் தீ விபத்து: உதவி எண் அறிவிப்பு

வியாழன் 13, ஜூன் 2024 3:24:05 PM (IST)

குவைத் தீவிபத்து தொடர்பான தகவல்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் மங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 49-பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் விபத்து தாெடர்பான விவரங்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு : +91 80 6900 9900, +91 80 6900 9901


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory