» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குவைத் தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழப்பு: சோகத்தில் வானரமுட்டி கிராமம்!

வியாழன் 13, ஜூன் 2024 12:43:21 PM (IST)குவைத் தீ விபத்தில் வானரமுட்டியைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழந்த தகவல் கிராமத்தில் சோகததை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உயிரிழந்த மாரியப்பனுக்கு, அவரது தாய் வீரம்மாள்,  கற்பக லட்சுமி என்ற மனைவியும், விமலா என்ற மகளும், கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர். மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory