» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!

வியாழன் 13, ஜூன் 2024 10:36:06 AM (IST)

குரும்பூர் அருகே தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வனக்குமார் (31). இவரது தாயார் மாரியம்மாள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த வனக்குமார், தாயாரின் மறைவால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory