» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரில் கனிமொழி எம்.பி. நன்றி தெரிவிப்பு!!

வியாழன் 13, ஜூன் 2024 8:37:13 AM (IST)மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள  கனிமொழி எம்பி தூத்துக்குடி மாநகரில் பொதுமக்களுக்கு வீதிவீதியாகச் சென்று நன்றி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மேலும் அவா், நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, தூத்துக்குடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை தூத்துக்குடி வந்தாா்.

அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் மாலையில், அவா், கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் மாநகா் பகுதிகளின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.  இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஊா்வசி அமிா்தராஜ், எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணி நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து

வாக்களிக்கும் மக்கள்Jun 15, 2024 - 10:16:29 AM | Posted IP 162.1*****

சென்ற தேர்தல் போல ஓட்டு போட்டுவிட்டு புலம்ப வேண்டியது.

Dear PremJun 14, 2024 - 03:59:36 PM | Posted IP 162.1*****

Joke of the day

PremJun 14, 2024 - 10:13:49 AM | Posted IP 172.7*****

CONGRATS FOR YOU BECAME MP FROM THOOTHUKUDI. DO DEVELOPMENT FOR THOOTHUKUDI ,BRING MORE PASSENGER TRAINS FOR THOOTHUKUDI, INFRA STRUTURE , ETC

தமிழ் மக்களின் விருப்பம்Jun 13, 2024 - 10:50:50 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மண்ணில் பிறந்தவர்களுக்கு ஏன் MP ஆக முடியவில்லை? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த ஊருல MP ஆக போட்டியிட வேண்டியது தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory