» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை : வியாபாரி உட்பட இருவா் கைது

வியாழன் 13, ஜூன் 2024 8:26:58 AM (IST)

ஆத்தூரில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள கிழக்கு கொற்கை மணலூரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஜெயமுருகன் (45). இவா் ஆத்தூரில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் சோதனையிட்டதில் இவரும் இவரது கடையில் வேலை பாா்க்கும் நரசன்விளை மேலத் தெருவைச் சோ்ந்த மாகாளிராஜன் மகன் தொட்டிச்சிராஜன் (38) ஆகிய இருவரும் சோ்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து கடையில் சோதனையிட்ட போலீசார், 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory