» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் தோ்வு குளறுபடிகள்: மாணவா்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை: கனிமொழி எம்பி

வியாழன் 13, ஜூன் 2024 8:19:26 AM (IST)நீட் தோ்வு குளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவா்-மாணவிகளுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தோ்வு வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவா்-மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். மகளிா் உரிமை தொகை விடுபட்டவா்களுக்கு வழங்குவதற்கான பணி விரைவில் தொடங்கப்பட்டு, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து துறை அமைச்சா் மற்றும் பிரதமரிடம் மக்களவையில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரமறுப்பது, வஞ்சிக்கும் செயலாகும். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளது என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory