» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் கடத்திய 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

வியாழன் 13, ஜூன் 2024 8:14:05 AM (IST)

கோவில்பட்டியில் பைக்கில் 200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் மற்றும் தனிப் பிரிவு காவலா் முத்துமாரி ஆகியோா் நேற்று செக்கடி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 4 மூட்டைகளுடன் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டபோது, மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா் வள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகாராஜா (21) என்பதும் அவா் அதிக விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்ததை அடுத்து அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிழக்கு காவல் நிலைய போலீசார் மகாராஜாவை கைது செய்து, அவா் வைத்திருந்த சுமாா் 200 கிலோ ரேஷன் அரிசி, பைக்கை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory