» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டரங்கு: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா்

வியாழன் 13, ஜூன் 2024 8:05:51 AM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட மக்கள் குறைதீா் கூட்டரங்கை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைதளத்தில் பொதுமக்கள் வசதிக்காக ரூ.50 லட்சத்தில் மக்கள் குறைதீா் கூட்டரங்கு புனரமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தது. இக்கூட்டரங்கு திறப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா். 

மக்களவை உறுப்பினர் கனிமொழி கூட்டரங்கை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா், வீட்டுமனைப் பட்டா, இலவச தையல் இயந்திரம், சுயதொழிலுக்கான கடன் ஆணை உள்ளிட்ட ரூ.4 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 437 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 321 பயனாளிகளுக்கு வழங்கினாா்.  முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜீ.வி.மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory