» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு சங்கத்தில் ரூ.18 கோடி நிதி முறைகேடு : சிபிஎம் கண்டன ஆா்ப்பாட்டம்!

வியாழன் 13, ஜூன் 2024 7:55:05 AM (IST)

பழையகாய­ல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிதி முறைகேட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், பழையகாய­ல் தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், கரோனா காலத்தில் ரூ.18 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பழையகாயல் பேருந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி புறகா் செயலா் முனியசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு, கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்தவா்களை விரைவில் கைது செய்ய வேண்டும், வாடிக்கையாளா்களின் வைப்பு நிதி மற்றும் அடமானம் வைத்த நகைகளைத் திருப்பி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory