» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 15ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது - மாநகராட்சி அறிவிப்பு

புதன் 12, ஜூன் 2024 5:56:43 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் வருகிற 15ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர்  மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய  பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 15.6.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

எனவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே,  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SudarshanJun 13, 2024 - 11:52:42 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் தோனுகால் கிராமம் கிராமத்தில் உள்ள விஏஓ எப்போது வருவார் எனக்கு பட்டம் மாறுதல் இருக்கின்றது இதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இடம் தெரிவித்துக் கொள்கின்றோம் எங்கள் வேலை கிடப்பில் போடப்பட்டுள்ளது மிக விரைவில் எங்களுக்கு பத்தாம் வருதல் எங்களது பட்டாவில் இருந்து மற்றவர் பெயர் சேர்ந்திருக்கின்றது அதுக்கு யார் யார் காரணம் என்று தெரியவில்லை இதனால் அனைத்து ஆவணங்கள் நான் வைத்துள்ளேன் எங்களது ஊரில் வந்தால் காசை கொடுத்து முடித்துக் கொள்கின்றேன் எப்படியும் காசு கேட்பது தான் செய்வாங்க கொடுத்துத்தான் ஆகணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory