» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் : எஸ்பி அறிவுறுத்தல்!

புதன் 12, ஜூன் 2024 3:20:19 PM (IST)இருசக்கர வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள்  அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடியில், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று (12.06.2024) தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பேசுகையில், சாலை பாதுகாப்பு நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சாலை விபத்துகளில் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகமாக நிகழ்கிறது. இதை தடுப்பதற்காகவே அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சியின் நோக்கமே இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதாகும். தலைகவசம் விபத்தின்போது நம்மை காப்பது மட்டுமில்லாமல் நமது குடும்பத்தையும்  சேர்த்து காப்பாற்றுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைகவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த சில இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசங்களையும், தலைகவசங்கள் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி இனிப்புகளும் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

m.sundaramJun 12, 2024 - 06:02:57 PM | Posted IP 162.1*****

see. what a irresponsible view is posted . How can we live as civilized and responsible citizen in India?

MANIJun 12, 2024 - 05:03:46 PM | Posted IP 162.1*****

MOST OF THE TIME TRAFFIC POLICE SEEING IM MOBILE NOT STAND IN SIGNAL

யாம்பாJun 12, 2024 - 04:54:15 PM | Posted IP 172.7*****

நாங்கள் எல்லாம் போருக்கா போறோம் ? ஹெல்மட் அணிவது எல்லாம் ஜட்டி அணிவது மாதிரி, அது அவங்க அவங்க விருப்பம் நாங்க செத்தால் உங்களுக்கென்ன

போதுஜனம்Jun 12, 2024 - 04:25:14 PM | Posted IP 162.1*****

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால் தான் அந்த இடத்தில் சிக்னல் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த காவலர்கள் அந்த இடத்தில் தலைக்கவசம் மற்றும் வாகனங்களை தணிக்கை செய்வதாக கூறிக்கொண்டு அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதும் மட்டுமில்லாமல் கூட்ட நெரிசலை ஏற்படுத்துகின்றனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory