» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

புதன் 12, ஜூன் 2024 3:16:21 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற தேதிக்கு வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை  தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு செய்துள்ளது. 

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகாத நிலையில் அவரது மகன்கள் ஆனந்த பத்மநாபன் அனந்த ராமகிருஷ்ணன் அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகிய நான்கு பேர் ஆஜராகினர். 

இந்த வழக்கில் அரசு தரப்பு 16-வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் மேலும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டுமென என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். 

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ஐயப்பன் வழக்கு விசாரணையை அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மனு மீதான உத்தரவு வருகிற ஜூன் 19ஆம் தேதி வரும் வாய்தாவில் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory