» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனிமொழி எம்பிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு

ராஜா | புதன் 12, ஜூன் 2024 3:10:39 PM (IST)



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பிக்கு தூத்துக்குடி நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெப்பாசிட் இழக்கச் செய்து வெற்றி பெற்றார்.

இதனையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்பி தன்னை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த கனிமொழி எம்.பிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர்கீதாஜீவன் தலைமையில் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் எம்.எல்ஏவுமான ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர்கள் செல்வராஜ், அருணாச்சலம், துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கவிதாதேவி, அபிராமிநாதன், ராமஜெயம், வீரபாகு, ரவி என்ற பொன்பாண்டி, ரகுராமன், துைண அமைப்பாளர்கள் பிரபு, நாகராஜன், ஓன்றிய செயலாளா்கள் ஜெயக்கொடி, சரவணக்குமார், ஜனகர், காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், இளங்கோ, ரவி,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருசேகன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ரவிந்திரன், ஆஸ்கர், சிவகுமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார்,கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜெயசீலி, சுப்புலட்சுமி, சுதா, நாகேஸ்வாி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா அணி அல்பட் உள்பட வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory