» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகம் சாலையில் மேயர் ஆய்வு
புதன் 12, ஜூன் 2024 12:29:54 PM (IST)

தூத்துக்குடி துறைமுகம் சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீன்பிடி துறைமுக சாலை முதல் மாநகராட்சி எல்லை வரை சாலையின் ஓரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி எல்லையில் இருந்து துறைமுக சாலையில் உள்ள சந்திப்பு வரை சாலையின் ஓரத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணி துவங்க உள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் இணைப்பு சாலை அல்லது மேன் குரோவ் /பாரஸ்ட்க்கு (சதுப்பு நில மரங்கள்) பாதிப்பு ஏற்படாதவாறு சாலையை அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், வட்ட செயலாளர் பிரசாந்த், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
TN69Jun 12, 2024 - 06:33:46 PM | Posted IP 162.1*****
ஊருக்குள்ள இருக்குற ரோடுகளை WGC road, GC road, tamil road, palayamkottai road, 1st railway gate, 2nd railway gate, 4th railway gate போன்ற ரோடுகளை அகலப்படுத்த முடியலை இந்த லட்சனத்துல துறைமுக சாலையை அகலப்படுத்தராங்கலாம் அகலம் தூத்துக்குடிய சிங்கப்பூர் ஆக்கரேன்னு சொன்னவர்கள் தானே நீங்கள்!!!!!??????
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது ஜீப் மோதி விபத்து: மாட்டு வியாபாரி பலி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:43:38 AM (IST)

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

இவங்கJun 13, 2024 - 11:02:32 AM | Posted IP 172.7*****