» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காெள்ளை முயற்சி : இளைஞர் கைது!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:59:08 PM (IST)கோவில்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ்(DBS) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.  இந்த மையத்தில் கடந்த சனிக்கிழமை (08.06.2024) அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால்  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளார். 

அப்போது  திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர் தனது முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் ‌ கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்த தென்காசி மாவட்டம் கீழ அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் ராஜா (28) என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜா மீது குருவிகுளம் காவல் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory