» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

செவ்வாய் 11, ஜூன் 2024 5:25:11 PM (IST)தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், உஷா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர், உஷா தலைமையில் வட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலையில் முதல் நாளான இன்று 11.06.24 நடைபெறுகிறது. இதில் உமரிக்கோட்டை, தட்டப்பாறை, அல்லிகுளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் 

முதல் நாள் 11.06.2024 செவ்வாய்கிழமை 

1)உமரிக்கோட்டை
2)மேலத்தட்டப்பாறை
3)கீழத்தட்டப்பாறை
4)அல்லிகுளம்
5)மறவன்மடம்
6)செந்திலாம்பண்ணை
7)தெற்கு சிலுக்கன்பட்டி

2-ம் நாள் 12.06.2024 புதன்கிழமை 

1)முத்துசாமிபுரம்
2)வடக்கு சிலுக்கன்பட்டி
3)அய்யனடைப்பு
4)இராமசாமிபுரம்
5)தளவாய்புரம்
6)கூட்டுடன்காடு
7)பேரூரணி

3-ம் நாள் 13.06.2024 வியாழக்கிழமை 

1)திம்மராஜபுரம்
2)வர்த்தகரெட்டிபட்டி
3)இராமநாதபுரம்
4)முடிவைத்தானேந்தல்
5)கட்டாலங்குளம்
6)சேர்வைக்காரன்மடம்
7)குலையன்கரிசல்

4-ஆம் நாள் 14.06.2024 வெள்ளிக்கிழமை 

1)கோரம்பள்ளம் பகுதி-1
2)கோரம்பள்ளம் பகுதி-2
3)குமாரகிரி
4)முள்ளக்காடு பகுதி-1
5)முள்ளக்காடு பகுதி-2
6)மீளவிட்டான் பகுதி-1
7)மீளவிட்டான் பகுதி-2

5-ம் நாள் 18.06.2024 செவ்வாய்க்கிழமை 

1)சங்கரப்பேரி
2)புலிப்பாஞ்சான்குளம்
3)மாப்பிள்ளையூரணி
4)தூத்துக்குடி பகுதி-1
5)தூத்துக்குடி பகுதி-2

பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நாட்களில் தங்களது குறைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

m.sundaramJun 11, 2024 - 09:11:39 PM | Posted IP 162.1*****

Good. But what the percentage of settlement of cases? Applications are forwaded to the concerned department for necessary action. People go the concerned department again. The same procedure followed. Settlement is done on cash payment but not in all cases.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory