» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்

செவ்வாய் 11, ஜூன் 2024 5:09:47 PM (IST)தூத்துக்குடியில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி பழுந்தடைந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.  

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி பின்புறத்தில் உள்ள கமாக் பள்ளிக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் இரு சக்கரம், நான்கு சக்கரம், ஆட்டோக்கள், மற்றும் பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு படிக்க வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது. 

இந்நிலையில், அப்பகுதியில் பிரதான சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அதில் கம்பு ஊன்றப்பட்டுள்ளது.  இதனை அறியாமல் வரக்கூடிய வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்து காட்சியளிக்கும் பாதாள சாக்கடை தொட்டிைய சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Jun 11, 2024 - 05:27:49 PM | Posted IP 172.7*****

மூடி மட்டும் அல்ல , மண் தேங்கி இருக்கு பொதுமக்களுக்கு கண் எரிச்சல், காற்று காலத்தில் அபாயம் உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory