» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை மிரட்டல்: ரவுடி கைது!
செவ்வாய் 11, ஜூன் 2024 4:19:34 PM (IST)
தூத்துக்குடியில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 09.06.2024 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீதாஜீவன் நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் சிலுவை பிச்சை ராபின் (30) என்பவர் மதுபோதையில் அவரது குடும்பத்தாரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது சிலுவை பிச்சை ராபினின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த மாசாணம் மகன் ஜீவா (37) என்பவர் சிலுவை பிச்சை ராபினை சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவை பிச்சை ராபின் மேற்படி ஜீவாவிடம் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜீவா நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆர்த்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிலுவை பிச்சை ராபினை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட சிலுவை பிச்சை ராபின் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.