» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லஞ்சம் வாங்கிய சார் ஆய்வாளர் கையும் களவுமாக கைது : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!

புதன் 29, மே 2024 9:58:40 PM (IST)

விளாத்திகுளத்தில் ரூ.3ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை பிரிவு சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (50).இவருக்கு விளாத்திகுளம் சிதம்பரநகரில் 3.4 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு கடந்த 2-ந் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். அவர் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க பிர்கா நில அளவையர் செல்வ மாடசாமியை (41) அணுகினார்.

ஆனால், செல்வ மாடசாமி விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.4 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக சிவலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரூ.3 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். ஆனாலும், லஞ்சம் கொடுக்க விருப்பாத சிவலிங்கம், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரையிடம் புகார் தெரிவித்தார். அவரது அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய பணத்தை போலீசார் சிவலிங்கத்திடம் கொடுத்து அனுப்பினர். 

இன்று மாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சூப் கடையில் வைத்து செல்வ மாடசாமியிடம் பணத்தை சிவலிங்கம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான  போலீசார் கையும், களவுமாக செல்வ மாடசாமியை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட செல்வமாடசாமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளாத்திகுளம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

போ.முருகேசன்மே 30, 2024 - 07:43:00 AM | Posted IP 162.1*****

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுண்டெலி தான் பாண்டிய இருக்கிறது பெருச்சாலிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர் அவர்களுக்கு தகுந்த பொறிவைத்துப்பிடிக்கவேண்டும். மக்கள் துணிச்சலாக லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பிடித்துக் கொடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory