» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாடு ஊராட்சியில் புதிதாக சாலைகள் அமைக்க கோரிக்கை

புதன் 29, மே 2024 4:59:43 PM (IST)வல்லநாடு ஊராட்சியில் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ள தெருவில் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லநாடு ஊராட்சியில் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ள தெருவில் உள்ள சாலை மிக சேதமடைந்து கழிவு நீர் தேங்கிய நிலையில் மோசமாக உள்ளது. இந்த தெருவில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணி மண்டபம், VTVD உயர்நிலைப் பள்ளி, பெருமாள் கோவில், விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

மேலும் மத்திய அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல கூடிய பிரபலமான கோசாலை இந்த தெருவில் அமைந்துள்ளது. இந்த பிரதான தெருவில் அடிக்கடி முக்கியமான பிரமுகர்கள் வந்து செல்வதால் இந்த தெருவில் சேதமடைந்த அனைத்து சாலையையும் சிறப்பான முறையில் புதிதாக சாலை அமைத்து தருமாறு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர் மு.சுகன் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory