» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூப் 1 தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்
புதன் 29, மே 2024 3:40:02 PM (IST)
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் TNPSC Group -I தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group -I 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC Group -I முதல்நிலைத் தேர்வானது வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம் தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)

Karpaga Selvam.mமே 30, 2024 - 07:02:31 PM | Posted IP 172.7*****