» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்றவருக்கு பாராட்டு விழா!

சனி 25, மே 2024 5:28:58 PM (IST)



ஒட்டுடன்பட்டியில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் ப.கோகுல் சிங்குக்கு பாராட்டு விழா நடந்தது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த ப.கோகுல் சிங் என்பவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர். ப.கோகுல் சிங்  2020 ஆம் நடைபெற்ற குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் தூத்துக்குடியில் உதவி வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்ச்சியில் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்க தலைவர் அன்ன லட்சுமணமூர்த்தி, பொருளாளர் செல்லத்துரை,செயலாளர் ரெங்கசாமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி, லட்சுமணகாந்தன் பாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார்அய்யாத்துரை, மற்றும் ஒட்டுடன்பட்டி கிராமத்தை சார்ந்த பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், அபிவிருத்தி நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory