» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தில் கோள்கள் திருவிழா

சனி 25, மே 2024 3:15:20 PM (IST)



கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான  கலை இலக்கிய  கோடை கொண்டாட்டத்தில் கோள்கள் திருவிழா திருவிழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் குழந்தைகளுக்கு கோள்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குழந்தைகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக்க்கு மாற்றுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு அதில் உளுந்தங்களி, கேப்பைரொட்டி, பயறுவகைகள்,சிறுதானிய உணவுகள்,உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார்,வட்டார கல்வி அலுவலர்கள் பத்மாவதி முத்தம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரதீப்பாண்டியன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்க மாநில தலைவர் உதயசங்கர்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா பார்ம்ஸ் பாபு,ரவிமாணிக்கம்,குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் ராணி விஜயா,ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி நிர்வாகி சுரேஷ்குமார்,உணவு ஆர்வலர் சுரேஷ்குமார், உள்பட பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி மணிமொழிநங்கை நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை எழுத்தாளர் தங்கத்துரையரசிதொகுத்து வழங்கினார், இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன்சாமுவேல். சிறார் இலக்கிய அமைப்பின் செயலாளர் பிரபு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory