» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காற்றாலை நிறுவன வாகனங்கள் சேதம்: ஒருவா் கைது

சனி 25, மே 2024 12:36:44 PM (IST)

கயத்தாறு அருகே காற்றாலை நிறுவன வேன், லாரி கண்ணாடிகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியில் உள்ள 3 கிராம சா்வே எண்ணில் காற்றாலை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை கண்காணிப்பதற்கு 2 காவலா்களையும் காற்றாலை நிறுவனத்தினா் நியமித்துள்ளனா். இந்நிலையில், சம்பவதன்று அங்கு வந்த 2 போ் காவலா்களை அவதூறாகப் பேசி அங்கு நின்றிருந்த வேன் மற்றும் லாரி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினராம். 

இதை தடுக்க சென்ற காவலா்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினராம். இதுகுறித்து காற்றாலை நிறுவனத்தில் ‘செக்யூரிட்டி சா்வீஸ்’ நிறுவன மேலாளா் தங்கப்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து, காப்புலிங்கம்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த ராமராஜன் மகன் மகாராஜன்(38) என்பவரை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணசாமி என்பவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory