» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாமானியன் பார்க்க வந்தவர்களை ரோஜா கொடுத்து வரவேற்ற ராமராஜன் நற்பணி மன்றத்தினர்!

சனி 25, மே 2024 11:03:32 AM (IST)



தூத்துக்குடியில் சாமானியன் திரைப்படம் பார்க்க வந்த மக்களை ராமராஜன் நற்பணி மன்றத்தினர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
   
தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் ராமராஜன் நீண்ட காலங்களுக்கு பிறகு நடித்த சாமானியன்  திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், படத்தை காண வருகை தந்த பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட, மாநகர மக்கள் நாயகன் ராமராஜன் தலைமை நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் காங்கிரஸ் எடிசன் தலைமையில் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

இதில், மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி. மாவட்ட செயலாளர் வேலுமணி,  மாநகர மாவட்ட தலைவர் பாலசங்கர்,  துணை தலைவர் வினோத், செயலாளர் மரியா ஆல்வின், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர்  ராகுல்கிங், செயற்குழு உறுப்பினர் டார்வின் போஸ்கோ, மாவட்ட செயலாளர் சுரேஸ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory