» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோவில் தேரோட்டம்: வேகத் தடைகளை அகற்ற இந்து முன்னணி கோரிக்கை!

புதன் 17, ஏப்ரல் 2024 3:48:28 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ரத வீதிகளில் வேகத்தடையை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுரை  ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 14.4.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. 

தேர் சுற்றி வரும் ரத வீதியில் தற்போது இரண்டு வேகத்தடை  அமைக்கப்பட்டுள்ளது. சித்திர திருவிழா அன்று தேரை பொதுமக்கள் தான் அனைவரும் ஒன்று கூடி தேர் இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள். மேற்படி வேகத்தடை அமைந்துள்ளதால் தேர் இழுப்பதில் சிரமமும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போது உயரமான தேர்களில் நடுக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி இரண்டு வேகத்தடையை உடனடியாக நீக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory