» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் தமிழ் புத்தாண்டு தரிசனம் : சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம்
ஞாயிறு 14, ஏப்ரல் 2024 6:18:14 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
