» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வாரிய தலைவர்

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 1:13:01 PM (IST)



அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் இன்று இந்தியாவில் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என்று விவசாய நிறுவன தலைவரும் கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவருமான பொன் குமார் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் விவசாய தொழிலாளர்கள் கட்சி நிறுவன தலைவர் கட்டிட தொழிலாளர்  நலவாரிய தலைவருமான பொண்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் "அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் இன்று இந்தியாவில் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டம் அடியோடு அப்பட்டமாக மீறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது தொழிலாளர்களுக்கு ஆதரவாக போடப்பட்ட 44 சட்டங்களை வளைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக நான்கு சட்டங்களாக மாற்றிய அரசு மோடி அரசு எனவே நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை வீழ்த்தி இந்தியாவை காத்து மாநில உரிமைகளை நடன நாட்டி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான ஒரு தர்மயுத்தம்.

தூத்துக்குடி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் 1200 கோடி ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள் இதேபோன்று ஏராளமான திட்டங்கள் மகளிர் உரிமை தொகை இலவசப் பேருந்து மக்களை தேடி மருத்துவம் இவை எல்லாம் நேரடியாக சென்று மக்களை அடைந்திருக்கிற காரணத்தினால் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 

இந்த தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை  கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க முடியாது தூத்துக்குடி மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சென்று பிரச்சாரம் செய்தபோது கனிமொழிக்கு ஆதரவாக உள்ள மனநிலையே காணப்படுகிறது கனிமொழி எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்களோடு இணைந்து ஓடோடி அவர்களுக்கு குரல் கொடுக்க கூடியவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழர்களுடைய உரிமையை கலாச்சாரத்தை மாநில உரிமையை காப்பதற்கு எழுப்பிய அர்த்தமுள்ள வாதங்கள் எல்லாருடைய உள்ளங்களிளும் நிலைத்திருக்கிறது இந்த தொகுதியில் போட்டியிடும் கனிமொழி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory