» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை வசந்த திருவிழா
ஞாயிறு 14, ஏப்ரல் 2024 12:06:22 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விசு வசந்த திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30க்கு பள்ளி அறை பூஜை, 4மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாரணை நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, தமிழ்ச்செல்வி தலைமை பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.