» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐடி பெண் ஊழியரின் செல்போன் திருட்டு!
ஞாயிறு 14, ஏப்ரல் 2024 11:55:57 AM (IST)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஐடி நிறுவன பெண் ஊழியரின் செல்போன், ஹேண்ட் பேக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அகரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மோகன் மகள் கிருத்திகா (26). இவர் அங்குள்ள ஐடிஐ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். கடலில் குளித்துவிட்டு பின்னர் நாழி கிணற்றில் குளிப்பதற்காக தனது ஹேண்ட் பேக் மற்றும் துணிகளை அதன் அருகில் வைத்துவிட்டு குளிக்க சென்றாராம்.
திரும்பி வந்து பார்க்கும்போது ஹேண்ட் பேக்கை காணவில்லை. அந்த பேக்கில் ரூ.4000 பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இருந்ததாம். இதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் கிருத்திகா அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்