» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை : 4பேர் கைது!

திங்கள் 4, மார்ச் 2024 4:06:25 PM (IST)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி அமுதா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து கருப்பசாமி (25). மேள கலைஞர். இவருக்கும் எஸ்.என்.ஆர்., நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் ராஜா என்ற எலி (23), 3 சென்ட் அந்தோனியார் புரத்தை சேர்ந்த ஜெயசீலன் மகன் ஆரோன் என்ற தயாளன் (20) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று கருப்பசாமியை 7பேர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ராஜா என்ற எலி, ஆரோன் என்ற தயாளன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பூவையார் மகன் பூபதிராஜா (20), நாகராஜ் மகன் சுடலை மணி (21) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory