» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை

திங்கள் 4, மார்ச் 2024 3:47:17 PM (IST)நாசரேத்தில் ரூ.26 லட் சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டுவதற்கு பூமி பூஜை  நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி 12 வது வார்டு திருவள்ளுவர் காலனியில் நமக்கு நாமே திட்டம் மூலமாக ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டுவதற்கு ஊர் மக்கள்  நிதி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிதி மற்றும் அரசின் நிதி மூலமாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கன்வாடி  மையம்  கட்டுவதற்கு பூமிபூஜைக்கு பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். 

துணை தலைவர் அருண் சாமுவேல்,  பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ் வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்  திமுக நகர செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார்,  இளநிலை  பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் பிரகாஷ்  மற்றும் ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள்  அதிசயமணி, ஐஜினஸ்குமார்,ரவிந்திரன், பத்திரகாளி,ரதிசந்திரன், சாமுவேல், ஸ்டெல்லா அப்பாதுரை, பெனிட்ரோ, ஜெயா, அனி சாலமோன்,ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி  12வது வார்டு  கவுன்சிலர்  ரவீந்திரன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory