» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மேள கலைஞர் வெட்டிக் கொலை : முன்விரோதத்தில் பயங்கரம்!
ஞாயிறு 3, மார்ச் 2024 7:43:03 PM (IST)
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் மேள கலைஞரை வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்த 7பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த தகராறில் ராஜா என்ற எலியும் ஆரோன் என்ற தயாளன் ஆகிய இருவரும் சேர்ந்து கருப்பசாமியை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா என்ற எலி, அருண் என்ற தயாளன் மற்றும் 5பேர் சேர்ந்து இன்று மாலை அமுதா நகரில் வீட்டில் இருந்த கருப்பசாமியை வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)
