» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலுக்கு தீவைப்பு: போலீஸ் விசாரணை!

ஞாயிறு 3, மார்ச் 2024 11:37:13 AM (IST)

ஆறுமுகநேரி அருகே கோவிலுக்கு தீவைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தில் ஐயா வைகுண்டர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் யாரோ  மர்ம ஆசாமி கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம ஆசாமி கோவிலில் விளக்கில் இருந்த எண்ணையை எடுத்து ரப்பர் சீட் மேல் கூரையில் ஊற்றி வைத்தாராம்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தீ மளமளவென்று எரிந்ததில் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் (53) என்பவர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார். கோவிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory