» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
ஞாயிறு 3, மார்ச் 2024 11:25:18 AM (IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகின்றார் என்று அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு. அப்போது தான் அவரை பற்றிய செய்திகள் வரும் அதனால் அப்படி பேசி வருகின்றார்.
மத்திய அரசின் திட்டம் எது மாநில அரசின் திட்டம் எது என்று கூட அவருக்கு தெரியவில்லை. தோல்வி பயத்தில் உலறி வருகின்றார். பேசுவது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று எதை எதையோ பேசுகிறார். வாயால் வடை சுடுகின்றார் என்றால் அது அண்ணாமலைக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.