» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்குகளில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 1, மார்ச் 2024 8:37:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான 4 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பு வைத்து கடந்த 30.01.2024 அன்று ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பு பகுதியை சேர்ந்த குணா (எ) பொன்தங்கம் என்பவரது மனைவி அமராவதி (23) என்பவரை குடும்ப பிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அமராவதியின் கணவரான முத்துராஜ் மகன் குணா (எ) பொன்தங்கம் (23), அதே பகுதியை சேர்ந்தவர்களான இவரது சகோதரரான முருகன் (எ) மருது (22) மற்றும் உறவினரான முனியன் மகன் வள்ளி (23) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

கடந்த 20.02.2024 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் to வேம்பார் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு வைத்து  ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த  சின்னதுரை மகன் ஹைகோர்ட் மகாராஜா (30) என்பவரை விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான குணா (எ) பொன்தங்கம், இவரது சகோதரரான முருகன் (எ) மருது, உறவினரான முனியன் மகன் வள்ளி மற்றும் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த  சின்னதுரை மகன் ஹைகோர்ட் மகாராஜா ஆகிய 4 பேரைும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory