» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் முதல்வ‌ர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா!

வெள்ளி 1, மார்ச் 2024 5:21:26 PM (IST)நாசரேத்தில்  நகர திமுக சார்பில் தமிழக முதல்வர், திமுக தலைவர் சார்பாக மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் கருத்தையா, நகர துணைசெயலாளர் ஜேம்ஸ், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் பாக் கியராஜ் திமுக கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பிரகாசபுரம், கே.வி.கே சாமி சிலை, பேரூந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின் திருமறையூர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூக்குபேறி கிளை கழக செயலாளர் அருள், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், நகர தொழில்நுட்பஅணி அமைப் பாளர் ராஜ்குமார், மாவட்ட வர்த்தகஅணி துணை செய லாளார் செல்லத்துரை,மாவ ட்டபிரதிநிதி அன்பு தங்க பாண்டியன், முன்னாள் மாவட்ட சிறுபாண்மை அமைப்பாளர் மாமல்லன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் பேச்சி முத்து, ஒன்றிய அவைத் தலைவர் மகரபூசனம், சேதுக்குவாய்த்தான் கிளை கழக செயலாளர் சோலை நட்டார்,வார்டு செயலாளர் கள் உடையார், சரவணன், இளங்கோ, தேவதாசன், மனோகரன், ஜெபகிருபை, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத் நல்ல சமாரியன் மனநலம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலை வர் நிர்மலா ரவி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொ டங்கி வைத்தார்.பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் ரவி செல்வ குமார் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டன. இதில் மாவட்ட திமுக பிரதி நிதிகள் கலையரசு, தாமரை செல்வன், மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக் கியராஜ், ஊராட்சி செயலா ளர் நட்டார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி,லிடியா,ஜெயா, வார்டு செயலாளர்கள் ஸ்டீபன்,ஜெரின் மற்றும் பால்ராஜ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory