» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை!
வெள்ளி 1, மார்ச் 2024 4:41:31 PM (IST)
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று பிரதமரிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மற்றும் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மா. பிரமநாயகம், எக்ஸ் தளம் வாயிலாக பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ரூ.7056 கோடி மதிப்பிலான வெளி துறைமுக விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டியதற்கு தூத்துக்குடி மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தூத்துக்குடி மக்கள் பயன்பெறும் வகையில் உங்கள் பொன்னான கரங்களால் (வண்டி எண் 16763/16764) தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் 3 முறை இயக்கும் விரைவு ரயில், (வண்டி எண் 16791/16792) பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிப்பு சேவை ஆகியவற்றை துவக்கி வைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
Robin.jMar 6, 2024 - 07:31:16 PM | Posted IP 172.7*****
Yes we the train.tuty have struggled In transportation
சுரேஷ்Mar 6, 2024 - 03:40:35 AM | Posted IP 172.7*****
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தை புறக்கணிக்கிிறது
Uday KumarMar 5, 2024 - 10:44:23 AM | Posted IP 172.7*****
வந்தே Bharat Exp கோவில்பட்டி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் இதில் பயன் பெறவில்லை.
KumarMar 4, 2024 - 09:52:21 AM | Posted IP 172.7*****
வாஞ்சி மணியாச்சி By-Pass வழியாக ரயில்களை இயக்கினால் kerala செல்லும் பல எண்ணற்ற ரயில்கள் தூத்துக்குடி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது..
ஜான் செல்வராஜ்Mar 4, 2024 - 09:20:24 AM | Posted IP 172.7*****
துறைமுக நகரான தூத்துக்குடி பல காலமாகவே இரயில்வே துறை புறக்கணித்து வருகிறது. வரும் தேர்தலுக்கு முன்பே நம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள் போராட வேண்டிவரும்
LukeMar 3, 2024 - 09:43:59 PM | Posted IP 172.7*****
16128 சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் காலை 10 மணிக்கு vanchi Maniyachchi வந்து சேர்கிறது.Maniyachchi to Thoothukudi இணைப்பு ரயில் சேவை வேண்டும்
Antony prameshMar 3, 2024 - 09:41:25 PM | Posted IP 172.7*****
16128 சென்னை எழும்பூர் வண்டி காலை 10 மணிக்கு வாஞ்சி மணியாச்சி வந்து சேருகிறது அதை தொடர்ந்து தூத்துக்குடிக்கு சேரும் வகையில் இணைப்பு தொடர்வண்டி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
MonishaMar 3, 2024 - 08:49:10 PM | Posted IP 172.7*****
16128 சென்னை எழும்பூர் வண்டி காலை 10 மணிக்கு வாஞ்சி மணியாச்சி வந்து சேருகிறது அதை தொடர்ந்து தூத்துக்குடிக்கு சேரும் வகையில் இணைப்பு தொடர்வண்டி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
P.MarimuthuMar 3, 2024 - 06:51:45 PM | Posted IP 172.7*****
வாஞ்சி மணியாச்சியில் கொரானாவுக்கு முந்தைய காலத்தில் நின்று சென்ற அனேக ரயில்கள் இப்போதுவரை நிற்பதில்லை. அதற்கும் சேர்த்து ஐயா பிரமநாயகம் அவர்கள் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும். மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி.
குமார்Mar 3, 2024 - 01:45:19 PM | Posted IP 172.7*****
தூத்தூக்குடி & திருச்செந்தூர் ரயில் பாதையாக அமைக்க வேண்டிடும் மத்திய அரசு தென்னிந்திய ரெயில்வே முன்வரவேண்டும்
தூத்தூக்குடி MP மத்திய அரசுக்கு வளிஊறுந்த வேண்டும்
GANESHMar 3, 2024 - 11:13:55 AM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர் வழியில்இருப்புப் பாதை அமைக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்ற வேண்டும்
SakthiMar 3, 2024 - 06:22:42 AM | Posted IP 172.7*****
இந்த இரண்டு இரயில்கள் இயக்க southern railway அறிவிப்பு கொடுக்கப்பட்டும், ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை!
BalamuruganMar 2, 2024 - 02:29:26 PM | Posted IP 172.7*****
இந்த ரயில் திட்டம் செயல்படுத்தியதற்கு கணிமொழி MP தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்திருந்தாரே இன்னும் ரயில் துவக்கபடவில்லையா என்ன
A.Issac JebaMar 1, 2024 - 09:43:56 PM | Posted IP 172.7*****
ஆனா ... இது பற்றி அறிவிப்புலாம் வந்துவிட்டதே .. தெற்கு ரயில்வேதான் மெளனமாக இருக்கிறது . .. இன்னும் 2 வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்
Ramar Brayantnagar tuticorinMar 7, 2024 - 10:33:07 PM | Posted IP 172.7*****