» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகா சிவராத்திரி விழா: சிவன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
வெள்ளி 1, மார்ச் 2024 4:25:52 PM (IST)
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனு: வருகின்ற 8ஆம் தேதி வெள்ளிகிழமை மகா சிவராத்திரி நாளன்று தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தூத்துக்குடி நகரின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவராத்திரி தினத்தன்று பக்த கோடிகளும், பொதுமக்களும், மகளிர்களும், மாணவ மாணவியரும் சிவன் கோவிலுக்கு வருகை தருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி அன்றைய விழா நாள் அன்று கூடுதலான கழிப்பறை வசதி, மற்றும் சிவன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் (கழிவுநீர் கால்வாய் ஓரங்களில்) ப்ளீச்சிங் பவுடர், கொசுமருந்து அடித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.