» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட 3பேர் நீதிமன்றத்தில் சரண்!

வெள்ளி 1, மார்ச் 2024 4:06:46 PM (IST)

தூத்துக்குடி அருகே வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட 3பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விளக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் 5பேர் மீது வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அந்தக் கொலையில் தேடப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28),  சின்னத்தம்பி (25), திருநெல்வேலி நாரண மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து (32) ஆகிய 3 பேர் திருச்சி 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மதியம் சரணடைந்தனர்.

அதைத்தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட்டு பாலாஜி 3 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர். கொலை வழக்கில் மூன்று பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory