» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பையில் வீசப்பட்ட மருந்து பாட்டில்கள் : கோவில்பட்டியில் பரபரப்பு!!

சனி 24, பிப்ரவரி 2024 10:47:26 AM (IST)



கோவில்பட்டியில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் மருந்து பாட்டில்கள் காலியிடத்தில் வீசி செல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் இருந்த ஹவுசிங் போர்டு வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் அந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த இடம் காலியிடமாக உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் பயன்படுத்தக் கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் மருந்து பாட்டில்கள் மலைபோல் குவிந்து கிடப்பது மட்டுமின்றி, காலியிடத்தின் பாதை முழுவதும் அந்த மருத்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்டுள்ளன. 

இதனால் அப்பகுதியில் இந்த மருந்து பாட்டில்கள் தான் காட்சியளிக்கும் நிலை உள்ளது. அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்பது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை அதிகரிக்கவும், இரத்த சோகை தாக்குதலை கட்டுப்படுத்துவும் கொடுக்க கூடிய மருந்து என்று கூறுப்படுகிறது. மருந்து பாட்டில்கள் குவியுலுடன் இனி இல்லை, இரத்த சோகை என்ற பெயரிலான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் கிடக்கிறது. 

இதில் உள்ள மருந்து பாட்டிகள் அனைத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலவாதியானதாக உள்ளது. மருந்துகள் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு என்று பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வகுத்துள்ள நிலையில், அரசு வழங்க கூடிய மருந்துகளை அந்த வழிகாட்டல் முறையில் அப்புறப்படுத்தமால் இப்படி காலியிடத்தில் அதுவும், அதிகமாக பள்ளி குழந்தைகள், பொது மக்கள் செல்லக்கூடிய பகுதியில் தமிழக அரசின் மருந்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு வீசி செல்லப்பட்ட மருந்துபாட்டில்களை குழந்தைகள் தெரியமால் எடுத்து கொடுத்தலோ அல்லது வேறு யாரூம் பயன்படுத்தினலோ பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் சூழ்நிலை இருப்பதால் வீசி செல்லப்பட்ட மருந்து பாட்டில்களை அப்புறப்படுத்துவது மட்டுமின்றி, இவ்வளவு அஜாக்கிரதையாக மருந்து பாட்டில்களை வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory