» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதன் 31, ஜனவரி 2024 8:08:31 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று (31.01.2024) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். இராமன் ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.
மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022 அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










