» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக சிறப்பு பயிற்சி
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:14:57 PM (IST)

தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் போதே 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு கல்லூரி வளாகத்தில் நவீன ஆய்வகங்கள் உள்ளன. கடந்த வருடம் கல்லூரியில் பயின்ற 98 சதவீத மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் 100 சதவீத இலக்குடன் அனைத்து துறை மாணவர்களுக்கு தினந்தோறும் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள கட்டமைப்புகளுடன் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெறலாம். இந்த பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் பேராசிரியர் ரீகன் ஆகியோர் செய்திருந்தனர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










