» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது : 5 சவரன் நகை மீட்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:21:15 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சாமி மனைவி பாப்பா (64) என்பவர் நேற்று டி.சவேரியார்புரம் சமுதாயகூடம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு சைக்கிளில் வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் மரியஇருதயம், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் முதல் நிலை காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன் (42) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்குபதிவு செய்து ஜேசுபாலனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.2.5லட்சம் 000/- மதிப்புள்ள 5 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










