» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)
மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. எனவே பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரையும், மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102), நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658) ஆகியவை நவம்பர் 30 முதல் ஜனவரி 24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) டிசம்பர் 1 முதல் ஜனவரி 24 வரையும், செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) நவம்பர் 30 முதல் ஜனவரி 21 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக செல்லும் மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் (22624) நவம்பர் 30 முதல் ஜனவரி 20 வரையும், மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) டிசம்பர் 3 முதல் ஜனவரி 23 வரையும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613), பனாரஸ் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536) டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - சென்னை எக்ஸ்பிரஸ் (12668), மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 19 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழி சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623) டிசம்பர் 1 முதல் ஜனவரி 21 வரையும், டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) நவம்பர் 30 முதல் ஜனவரி 23 வரையும், அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரையும்,
சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரையும், மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ் (22101) டிசம்பர் 6 முதல் ஜனவரி 24 வரையும், ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535) டிசம்பர் 6 முதல் ஜனவரி 18 வரையும், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) டிசம்பர் 1 முதல் ஜனவரி 20 வரையும், தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) டிசம்பர் 3 முதல் ஜனவரி 24 வரையும், தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) டிசம்பர் 3 முதல் ஜனவரி 25 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimearrest_1722057120.jpg)
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது தாக்குதல் : வாலிபர் வெறிச்செயல்!
சனி 27, ஜூலை 2024 10:42:26 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/emp34o43i_1722056525.jpg)
நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது: ஆணைய உறுப்பினர்
சனி 27, ஜூலை 2024 10:30:48 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimescene_police_1722056230.jpg)
ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்: 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 27, ஜூலை 2024 10:24:59 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/jailprisonarrest_1722055476.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சனி 27, ஜூலை 2024 10:13:04 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/onlinejobarrest_1722055105.jpg)
ஆன்லைன் ஜாப் என்று கூறி ரூ.55 லட்சம் மோசடி : குஜராத்தைச் சேர்ந்த 2பேர் கைது!
சனி 27, ஜூலை 2024 10:07:01 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/spbalajisaravanantuty_1705923879_1722054668.jpg)
பனிமய மாதா திருவிழா: 10 இடங்களில் வாகன நிறுத்தம் - எஸ்பி தகவல்!
சனி 27, ஜூலை 2024 10:01:18 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/images (1)_1722010798.jpg)