» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!

செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)சாத்தான்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு உயிரிழந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன் விளையைச் சேர்ந்தவர் முத்து . இவர் ஆடு, மாடுகள் வளர்த்தி வருகிறார். இந்நிலையில் வளர்த்து வரும் பசுமாட்டை அங்குள்ள காட்டு பகுதியில் இன்று மேயவிட்டுள்ளார். மதியம் சென்று பார்த்தபோது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மாடு மின்சாரம் தாககியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சப்ளையை துண்டித்து மின்கம்பியை சீரமைத்துள்ளனர். உயிரிழந்த மாட்டின் விலை சுமார் ரூ45 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து முத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிககப்பட்ட தொழிலாளிக்கு அரசு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூக்கமின்றி தவித்த இளைஞர் தற்கொலை!!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:58:11 PM (IST)

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory