» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி to திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஒரு உப்பு ஆலை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர் தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்த ரசாரி மகன் மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் (25) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் எதிரி மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 வழக்குகளும், தெர்மல்நகர், தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 9 வழக்குகளும் என மொத்தம் 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.