» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா!

செவ்வாய் 28, நவம்பர் 2023 8:18:25 PM (IST)



தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் முடிவைத்தானேந்தல் மகளிர் சுயஉதவிக்குழுவினர் முதல் பரிசினை வென்றனர்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி மகளிர் திட்டக்குழு சார்பில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 36 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவினரும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்துமிக்க உணவுப் பண்டங்களை காட்சிப்படுத்தினர். 

இதில், தூத்துக்குடி ஊராட்சிய ஒன்றியம், முடிவைத்தானேந்தல் ஊராட்சியை சேர்ந்த அறிவுச்சுடர் அறியநாச்சி மகளிர் சுயஉதவிக்குழுவினர் முதல் பரிசை பெற்றனர். சாத்தான்குளம் ஊராட்சிய ஒன்றியம், முதலூர் ஊராட்சியை சேர்ந்த மெர்குரி மகளிர் சுயஉதவிக்குழுவினர் இரண்டாம் பரிசினை பெற்றனர். ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும் வென்றான் ஊராட்சியை சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழு மூன்றாம் பரிசினை வென்றனர். 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5  ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.4 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு பரிசாக 2 குழுவினருக்கு 2,500 ரூபாயும், ஆறுதல் பரிசாக 3 குழுவினருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவினர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், தூத்துக்குடி மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் கனகராஜ், தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், தகவல்தொழில்நுட்ப அணி மாரிசெல்வம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory